மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்த தளபதி வீடியோ இன்று ரிலீஸ்!

வியாழன், 4 மே 2023 (15:09 IST)
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நடிகர் விஜய் சந்தித்த வீடியோ இன்று மாலை  வெளியாகும் என்று புஷ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், வாரிசு பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்  விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் விலையில்லா விருந்தகத்தைச் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் விலையில்லா விருந்தகத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வரும் மக்கள் இயக்க நிர்வாகிகள விஜய் சந்தித்தார்.

இந்த வீடியோ எப்போது வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் கேட்டிருந்தனர். இவ்வீடியோ  இன்று மாலை 6 மணிக்கு TVMIoffl #YouTube சேனலில் வெளியாகும் என்று புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

#EXCLUSIVE:

விலையில்லா விருந்தகத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்த தளபதி @actorvijay அவர்கள் | VVV Meet Exclusive Video

இன்று மாலை 6 மணிக்கு நமது தளபதி விஜய் மக்கள் இயக்கம் @TVMIoffl #YouTube சேனலில்.!

Subscribe ▶️: https://t.co/DVy4Hq7zpdpic.twitter.com/3UfD5Cs8Mw

— Bussy Anand (@BussyAnand) May 4, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்