கொரோனாவால் தலைவி படத்துக்கு இத்தனை கோடி நஷ்டமா?

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (09:53 IST)
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி படத்துக்காக போடப்பட்ட இரண்டு செட்கள் படப்பிடிப்பு நடத்தப்படாமல் உள்ளதால் சேதமாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ‘தலைவி’ என்ற டைட்டிலில் இயக்கி வருபவர் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் திடீரென கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹைதராபத்திலும் தமிழகத்தில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் இரண்டு பிரம்மாண்டமான செட்கள் இந்த படத்துக்காக போடப்பட்டு இப்போது வாடகை எல்லாம் கொடுத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் லாக்டவுன் இன்னும் அதிகமாகும் பட்சத்தில் மழையால் செட்கள் பாதிக்கப்பட்டு 5 கோடி வரை தயாரிப்பாளருக்கு நஷ்டம் வரலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்