அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பல்வேறு பகுதிகளும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளாததே இதற்கு காரணம் என பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க பத்திரிக்கை ஒன்றில் “அதிபர் ட்ரம்ப் மதிய வேளையில்தான் பணிக்கே வருவதாகவும், இஷ்டப்பட்டதை சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவதாகவும்” செய்திகள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளித்துள்ள ட்ரம்ப் ”என்னை பற்றி தெரியாத பத்திரிக்கையாளர் யாரோ தவறுதலாக ஏதேதோ எழுதியுள்ளார். என்னுடன் இருப்பவர்களுக்கு நான் வேலை பார்ப்பதை பற்றி தெரியும். அதிகாலையில் பணிகளை கவனிக்க தொடங்கும் நான் நள்ளிரவு வரை பணி புரிகிறேன். சில நாட்களில் வெள்ளை மாளிகையிலேயே தங்கி பணி புரியும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது” என்று தன்னை தானே பெருமையாக கூறிக்கொண்டுள்ளார்.