விஜய்க்காக உருவாக்கிய கதையில் சூர்யாவை இயக்குகிறாரா R J பாலாஜி?

vinoth
புதன், 25 செப்டம்பர் 2024 (09:08 IST)
சூர்யாவின் 44வது திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான் தீவுகள், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இன்னும் ஒரு சில வாரங்களில், படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சூர்யாவின் அடுத்தப் படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திடீர் செய்தி கடந்த சில தினங்களாக வைரலாகப் பரவி வரும் நிலையில் இந்த படம் பற்றி மேலதிக விவரங்கள் வெளியாகியுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆர் ஜே பாலாஜி விஜய்க்காக ஒரு கதையை உருவாக்கி அவரிடம் சொல்லியிருந்தார். ஆனால் அந்த கதை அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை.

இந்நிலையில் அதே கதையைதான் சில மாற்றங்கள் செய்து இப்போது சூர்யாவை இயக்க உள்ளாராம். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. குறுகிய கால படமாக இந்த படம் உருவாகவுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்