சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

Siva

திங்கள், 23 செப்டம்பர் 2024 (18:34 IST)
சூர்யாவின் 44வது திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான் தீவுகள், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இன்னும் ஒரு சில வாரங்களில், படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சூர்யாவின் அடுத்தப் படம் குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள 'வாடிவாசல்' உள்பட சில படங்களில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்பட்டாலும், தற்போது வெளிவந்துள்ள தகவல் படி, நகைச்சுவை நடிகரும் இயக்குனருமான ஆர்ஜி பாலாஜி இயக்கும் திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தை முடித்துவிட்டு தான் சூர்யா 'வாடிவாசல்' திரைப்படத்திற்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அட்லியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்