நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth

திங்கள், 23 செப்டம்பர் 2024 (14:32 IST)
நானி, பிரியங்கா மோகன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் பான் இந்தியா படமான 'சரிபோதா சனிவாரம்' படம் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி ரிலீஸாகி பரவலாக பாராட்டுகளைப் பெற்றது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, முரளி ஜி ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸான 'சரிபோதா சனிவாரம்' திரைப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் நல்ல வசூலைப் பெற்று 100 கோடி ரூபாய் அளவுக்கு  வசூலித்தது. ஆனாலும் தெலுங்கு மொழி தவிர இந்த படம் பெரிய அளவுக்கு ரசிகர்களைக் கவரவில்லை.

இந்நிலையில் இந்த படம் வரும் 26 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. ஐந்து மொழிகளில் இந்த படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்