“பிரின்ஸ் கொஞ்சம் சவாலான திரைப்படம்தான்…” சிவகார்த்திகேயன் கருத்து!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (09:21 IST)
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் – தெலுங்கில் பிரின்ஸ் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டாக்டர் மற்றும் டான் படங்களின் மூலம் வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில் இந்த படத்தை 100 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பெரிய அளவில் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர்கள் லாபம் பார்த்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அப்போது பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் “இந்த படத்தின் இயக்குனர் அனுதீப் தெலுங்குகாரர். அவர் தெலுங்கில் சிந்திப்பதை தமிழுக்கு ஏற்றபடி மாற்றவேண்டும். இதனால் இந்த படம் கொஞ்சம் சவாலானதாகதான் அமைந்தது.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்