சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

வெள்ளி, 14 அக்டோபர் 2022 (17:11 IST)
சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’  திரைப்படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில் தற்போது மூன்றாவது பாடல் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது 
 
தமன் இசையில் உருவான இந்த பாடலை அறிவு எழுதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் ஜோடியாக மரியா நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் சிவகார்த்திகேயனின் அடுத்த படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்