சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்… கண்டுகொள்ளாத ஆந்திர சினிமா!

திங்கள், 17 அக்டோபர் 2022 (15:58 IST)
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் ரிலீஸ் ஆகிறது.

சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் – தெலுங்கில் பிரின்ஸ் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டாக்டர் மற்றும் டான் படங்களின் மூலம் வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில் இந்த படத்தை 100 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பெரிய அளவில் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர்கள் லாபம் பார்த்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் பிரின்ஸ் படத்துக்கு ஆந்திராவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு எதிர்பார்ப்பு இல்லையாம். இதற்குக் காரணம் சமீபத்தில் இயக்குனர் அனுதீப் திரைக்கதை எழுதி வெளியான படம் ஒன்று தோல்வி அடைந்ததுதான் என்று சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்