காஷ்மீர் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய சிவகார்த்திகேயன்!

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (12:14 IST)
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கடந்த மாதம் காஷ்மீரில் இதன் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்த படத்தின் கதை பற்றி வெளியான தகவலின் படி சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு ராணுவ வீரராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஒரு ராணுவவீரரின் கதையைதான் இந்த படத்தில் எடுப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் க்ளைமேக்ஸில் சிவகார்த்திகேயன் இறந்துவிடுவது போல உருவாக்கப்பட்டுள்ளதாம் திரைக்கதை.

இந்நிலையில் விறுவிறுப்பாக முடிந்த காஷ்மீர் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் இப்போது சென்னை திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்