இளையராஜா காலில் விழுந்து ஆசி வாங்கிய தேவி ஸ்ரீ பிரசாத்!

சனி, 26 ஆகஸ்ட் 2023 (13:10 IST)
2021 ஆம் ஆண்டுக்கான 69 ஆவது தேசிய விருதுகள் நேற்று முன் தினம் மாலை அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில் முன்னணி நடிகர்களின் படங்கள் இடம்பெற்று இருந்தன. ஆனால் ஒருசில படங்களை தவிர மற்ற படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை.

புஷ்பா 1 படத்துக்காக அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகர் விருதளிக்கப்பட்டது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. அதே போல அந்த படத்துக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு சிறந்த பாடல் இசைக்கான விருதளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய விருது பெற்றபின்னர் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். இளையராஜாவை அவரின் ஸ்டுடியோவில் சந்தித்த தேவி ஸ்ரீ பிரசாத், அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nikil Murukan (@onlynikil)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்