தனி ஒருவன் 2 விலும் நயன்தாரா தான் ஹீரோயினா?

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (12:07 IST)
பிரபல இயக்குனரான மோகன் ராஜா தொடர்ச்சியாக ரீமேக் படங்களையே இயக்கி, வந்த நிலையில் தனி ஒருவன் படத்தின் மூலம் தன்னுடைய திறமையை நிரூபித்தார். ஜெயம்ரவியின் சினிமா வாழ்க்கையிலும் அந்தப் படம் முக்கியமானதொரு படமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த படம் இப்போது வெளியாகி 8 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் நாளை இந்த இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாராவே கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும், வில்லனாக நடிக்க முன்னணி நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்