நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’டாக்டர்’ மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’அயலான்’ என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த 2 படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் தான் திடீரென கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் ’டாக்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெறும் 15 நாட்கள் மட்டுமே இருப்பதாகவும் அதே போல ’அயலான்’ படத்தின் படப்பிடிப்பு வெறும் 17 நாட்கள் மட்டுமே இருப்பதாகவும் இரண்டையும் அவர் ஒரே மாதத்தில் முடித்துவிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது
சிவகார்த்திகேயன் ’டாக்டர்’ திரைப்படம் இன்னும் ஓரிரு மாதங்களில் ரிலீஸாக வாய்ப்பு உள்ளது என்றாலும் ’அயலான்’ திரைப் படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் 8 மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அடுத்த ஆண்டு இறுதியில் தான் இந்த படம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது
எனவே அடுத்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த இரண்டு படங்கள் அடுத்த ஆண்டு ரிலீஸ் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து மூன்று படங்களில் ஒப்பந்தமாகி உள்ளதால் அவரது படங்கள் தொடர்ச்சியாக ரிலீஸ் ஆகும் வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது