தொட்டி ஜெயா பார்ட் 2 – சிம்புவின் அடுத்த ப்ளான் !

Webdunia
செவ்வாய், 7 மே 2019 (15:27 IST)
சிம்பு நடித்து கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான தொட்டி ஜெயா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

சிம்பு நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியானப் படம் தொட்டி ஜெயா. சிம்புவின் வித்தியாசமான நடிப்பில் உருவான இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக கோபிகா நடித்திருந்தார். வி. இசட். துரை இயக்கும் இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப் பெறவில்லை.

அந்தப் படம் வெளியாகி 14 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இப்போது அதன் அடுத்த பாகம் உருவாக இருப்பதாகத் தெரிகிறது. முதல் பாகத்தை இயக்கிய துரையே இந்த பாகத்தையும் இயக்க இருக்கிறார். இந்த பாகத்தில் நடிக்க சிம்பு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் மாநாடு மற்றும் மஃப்டி ஆகியப் படங்களை அடுத்து இந்தப்படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்