தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு கடந்த சில வருடங்களாகவே உடல் எடை கூடி குண்டாக இருந்து வந்தார் இதனால் இவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல், நடிக்கும் படங்களுக்கும் வெற்றியடையாமல் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வந்தார்.
ஆனால், அந்த படத்திற்கு பின்னர் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தைப் பெற்றது. அப்படத்தில் சிம்பு குண்டான தோற்றத்தில் இருந்ததாக சொல்லி கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார்.
இந்நிலையில் உடல் எடை குறைத்த உடனே தற்போது சம்பளத்தை ஏற்றியுள்ளார். மாநாடு படத்திற்கு பிறகு கௌதம் கவுதம் கார்த்திக் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சிம்பு 6 கோடி ருபாய் சம்பளம் அட்வான்ஸாக மட்டுமே பெற்றுள்ளாராம். மேலும் படத்தின் லாபத்தில் பெரிய பங்கு தரவேண்டும் என்றும் ஒப்பந்தம் போட்டுள்ளாராம். பொதுவாக பெரிய நடிகர்கள் தான் படத்தின் லாபத்தில் பங்கு போடுவார்கள் தற்போது சிம்புவும் இப்படி இறங்கியுள்ளது தயரிப்பாளர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.