‘தமிழ் சினிமாவில் தமிழில் பாடல்கள் எழுத முடியவில்லை’… இசையமைப்பாலர் ஷான் ரோல்டன் புலம்பல்!

vinoth

வியாழன், 24 ஏப்ரல் 2025 (13:12 IST)
குட்னைட் மற்றும் லவ்வர் படங்களின் மூலம் கவனம் பெற்ற ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தற்போது ஐந்து படங்களைத் தயாரித்து வருகிறது. அதில் சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்துள்ள ‘டூரிஸ்ட் பேமிலி’ படமும் ஒன்று.

சில மாதங்களுக்கு முன்னர்  ரிலீஸான இந்த படத்தின் டீசர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இலங்கை தமிழ் பேசும் குடும்பம் ஒன்று ஊரைவிட்டு ரகசியமாகக் கிளம்புவது போலவும் அதில் நடக்கும் சொதப்பல்களுமாக அந்த டீசர் கவனம் பெற்றது. இதன் காரணமாக படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதன் காரணமாக மே 1 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.

இந்நிலையில் நேற்று படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் “முகைமழையா(டூரிஸ்ட் பேமிலி படப் பாடல்) vibe-ஏ இல்லையே என்றெல்லாம் என்னிடம் சொன்னார்கள். சினிமாப் பாடல்களில் ஒரு அழகான தமிழ் வார்த்தையைக் கூட பயன்படுத்த முடியவில்லை. நானும் நிறைய தங்க்லீஷ் வார்த்தைப் பாடல்களுக்கு இசையமைக்கிறேன். ஆனால் அதே நேரம் தமிழ்ப் பாடல்களுக்கும் இடம் இருக்க வேண்டும். இப்படி ஒரு மொழியில் பிறந்துவிட்டு அதன் அருமை தெரியாமல் இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்