மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

Mahendran

வெள்ளி, 4 ஜூலை 2025 (13:14 IST)
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்த 'பீனிக்ஸ்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், அப்படத்துக்கு வாழ்த்து பெறுவதற்காக நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து ஆசி பெற்ற புகைப்படத்தை சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
 
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'பீனிக்ஸ்' திரைப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இது ஒரு ஆக்சன் திரில்லர் படமாக இருந்தாலும், ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்றாலும், முதல் படம் என்பதால் மோசமில்லை என்றும் பேசப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், தனது முதல் படத்திற்கு வாழ்த்து பெறுவதற்காக நடிகர் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார் சூர்யா. இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில், "உங்களுடைய கனிவான வார்த்தைகள் மற்றும் கட்டி அணைத்து தெரிவித்த வாழ்த்துக்கு நன்றி. இதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்