தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்! முதல் படமே முத்திரை பதித்தாரா சூர்யா சேதுபதி? - பீனிக்ஸ் வீழான் திரை விமர்சனம்!

Prasanth K

வெள்ளி, 4 ஜூலை 2025 (12:38 IST)

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடித்து வெளியாகியுள்ள பீனிக்ஸ் வீழான் திரைப்படம் ஆக்‌ஷன் அதிரடியால் ஆடியன்ஸை ஈர்க்கிறது.

 

படத்தின் முதல் காட்சியிலேயே எம்.எல்.ஏவாக இருக்கும் சம்பத்தை சூர்யா சேதுபதி கொலை செய்கிறார். இந்த கொலை குற்றத்திற்காக அவர் சிறுவர் சீர்திருத்த ஜெயிலில் அடைக்கப்படுகிறார். அவருக்கு 17 வயதுதான் ஆகிறது. தனது கணவரான கொன்ற சூர்யா சேதுபதியை பழிவாங்க துடிக்கிறார் எம்.எல்.ஏவின் மனைவி வரலட்சுமி சரத்குமார். 

 

இதற்காக தனது ஆதரவாளர்களை வைத்து வரலெட்சுமி சூர்யாவை கொல்ல ஸ்கெட்ச் போடுகிறார். இதிலிருந்து சூர்யா சேதுபதி எப்படி தப்பிக்கிறார்? எம் எல் ஏ சம்பத்தை சூர்யா சேதுபதி கொன்றது எதனால்? என்று பரபரப்பாக நகர்கிறது கதை. 

 

சூர்யா சேதுபதிக்கு இது முதல் படம் என்றாலும், நடிப்பை திறம்பட கையாண்டுள்ளார். முதல் படம் என்பதால் சுமையை குறைக்கும் விதமாக முதல் பாதியில் பெரும்பாலும் அவருக்கு வசனம் இல்லாமல் உள்ளது. முதல் பாதியில் ஆக்ரோஷமாக வெடிப்பவர், இரண்டாம் பாதியில் பாசத்தில் உருகுகிறார். 

 

இயக்குனர் அனல் அரசு ஸ்டண்ட் மாஸ்டர் என்பதால் படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. பெயருக்கேற்றார் போல ஆக்‌ஷன்களில் அனல் பறக்க விடுகிறார் அனலரசு. சாம் சிஎஸ் இசையில் இந்தா வாங்கிக்கோ பாடல் இளசுகளுக்கு ஒரு வைப் மெட்டீரியல்.

 

எந்தளவு ஆக்‌ஷன் காட்சிகள் பிரமிக்க வைக்கிறதோ அதேசமயம் கதையின் போக்கில் அதிக நேரத்தை ஆக்‌ஷன் காட்சிகள் எடுத்துக் கொள்வது நடுத்தர வயதினருக்கு சற்று அயற்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சூர்யா சேதுபதியின் முதல் படமே ஆக்‌ஷன் படமாக வெற்றி பெற்றிருக்கிறார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்