க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

Prasanth K

வெள்ளி, 4 ஜூலை 2025 (11:04 IST)

சமீபத்தில் நடிகர் தனுஷ் இந்தியில் பிரபலமான நடிகைகளான பூமி பட்னேகர், க்ரித்தி சனோன், மிருனாள் தாக்குர், தமன்னா உள்ளிட்டோருடன் இரவு விருந்து ஒன்றில் கலந்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்தன்மையோடு இயங்கி வரும் தனுஷ், தமிழ் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் படங்களில் தொடர்ந்து நடிக்கத் தொடங்கியுள்ளார். தற்போது தனுஷ் இந்தியில் தயாராகி வரும் தெரே இஷ்க் மே என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

 

தனுஷை வைத்து முன்னதாக அம்பிகாபதி, கலாட்டா கல்யாணம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை க்ரித்தி சனோன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது.

 

இந்நிலையில் அங்கு நடத்தப்பட்ட நைட் பார்ட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் கலந்துக் கொண்டுள்ளார். அதில் பிரபல இந்தி நடிகைகளான தமன்னா, க்ரித்தி சனோன், மிருணாள் தாக்குர், பூமி பட்னேகர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்