சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸான இந்த படத்தின் டீசர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இலங்கை தமிழ் பேசும் குடும்பம் ஒன்று ஊரைவிட்டு ரகசியமாகக் கிளம்புவது போலவும் அதில் நடக்கும் சொதப்பல்களுமாக அந்த டீசர் கவனம் பெற்றது. இதன் காரணமாக படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதன் காரணமாக மே 1 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.
இதையடுத்து இன்று நடந்த இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சசிகுமார் தனது அயோத்தி படத்தால் நடந்த நன்மைக் குறித்துப் பேசியுள்ளார். அவரது பேச்சில் “அயோத்தி படத்தால் இறந்தவர்களின் உடலை விமானத்தில் கொண்டுசெல்லும் நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளதாகவும், ஒரு லட்சம் வரை மானியம் கொடுப்பதாகவும் என்னிடம் ஒருவர் சொன்னார். இதன் மூலம் 500 குடும்பங்கள் பயனைந்துள்ளன. எனக்கேத் தெரியாமல் இப்படி ஒரு நல்லது நடந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.