ஒரு புரமோவை கூட திட்டமிட்டு எடுக்க தெரியாத வெற்றிமாறன்? ரசிகர்கள் கிண்டல்..!

Siva

வெள்ளி, 4 ஜூலை 2025 (17:35 IST)
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் ப்ரோமோ வீடியோ கடந்த வாரமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் ஒரு நாள் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது அந்த ப்ரோமோ வீடியோவில் கூட சில மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகவும், ஏற்கனவே எடுத்த சில காட்சிகளை ரத்து செய்துவிட்டு, மீண்டும் சில காட்சிகளை படமாக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இதனால், இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகும் தேதி மேலும் தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது.
 
ஏற்கனவே 'விடுதலை 2' படத்தை 5 மணி நேரம் எடுத்து, அதன் பின் அதை இரண்டரை மணி நேரமாக எடிட் செய்தவர் தான் வெற்றிமாறன் என்றும், அதேபோல் ஒரு ப்ரோமோ வீடியோவை கூட திட்டமிட்டு எடுக்கத் தெரியாத அளவுக்கு ஒரு இயக்குனர் இருக்கிறார் என்றால் அது சினிமாத்துறைக்கு ஒரு வெட்கக்கேடு என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
 
தயாரிப்பாளரின் பணத்தை வீணாக்குவதில் வெற்றிமாறனைப் போல மிகச் சிறந்தவர் யாருமில்லை" என்று கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. "ப்ரோமோ வீடியோவையே மாற்றி மாற்றி எடுப்பவர், இந்த படத்தையே எப்படி எடுப்பார் என்பதை இப்போதே புரிந்துகொள்ளலாம்" என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்