கூலி படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம்.. இஷ்டத்துக்கு அடித்துவிடும் யூடியூபர்கள்.. உண்மை நிலை என்ன?

Siva

வெள்ளி, 4 ஜூலை 2025 (17:42 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் விளம்பரப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. அதுமட்டுமின்றி, இந்த படத்தின் வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில், இந்த படத்தின் வியாபாரத்தை தயாரிப்பு நிறுவனம் தொடங்கி விட்டதாகவும், முதல் கட்டமாக வெளிநாட்டு வியாபாரத்தை முடித்து விட்டதாகவும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஆனால், தயாரிப்பு நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், இஷ்டத்துக்கு தங்கள் சொந்த கருத்துக்களையும் கற்பனையோடும் சேர்த்து அடித்துவிடும் சில யூடியூபர்கள், 'கூலி' படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம் 90 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக கூறி வருகின்றனர். 
 
ஆனால், இது எதுவுமே உண்மை இல்லை என்றும், ஓவர்சீஸ் வியாபாரம் குறித்த பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்று வருவதாகவும், இன்னும் தொகை எவ்வளவு, விற்பனை செய்யப்போகும் நிறுவனம் எது என்பதை உறுதி செய்யவில்லை என்றும் தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்