நடிகை சிம்ரன் சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, தனது சக நடிகை நடித்த கேரக்டர் குறித்து மெசேஜ் போட்டதாகவும், அதற்கு அந்த நடிகை "ஆன்ட்டி கேரக்டரில் நடிப்பதை விட இது எவ்வளவோ மேல்" என்று பதில் மெசேஜ் போட்டது தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், நெட்டிசன்கள் "சிம்ரன் யாரை குறிப்பிடுகிறார்?" என்று தேட தொடங்கிவிட்டனர். அந்த வகையில், சமீபத்தில் டப்பா கார்ட்வெல் தொடரில் ஜோதிகா நடித்த நிலையில், அவரை தான் சிம்ரன் மறைமுகமாக குறிப்பிட்டார் என்று சில நெட்டிசன்கள் கூறினர்.
ஆனால் அதே நேரத்தில், கோட் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்த லைலாவை தான் சிம்ரன் குறிப்பிடுவதாகவும், ஒரு சிலர் யூகித்து வருகின்றனர். இன்னும் சிலர், அவர் குறிப்பிடுவது த்ரிஷாவை தான் என்றும் கூறி வருகின்றனர். இந்த மூவரில், சிம்ரன் கூறியது யாரை என்பது அவருடைய மனதிற்கு மட்டுமே தெரியும்.
இந்த நிலையில் சிம்ரன் தனது கொள்கையை மாற்றிக்கொள்வதில்லை என்றும், சின்ன கேரக்டராக இருந்தாலும் அது ஆன்ட்டி கேரக்டராக இருந்தால், தனக்கு பிடித்தமான, படத்திற்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டராக இருந்தால், தொடர்ந்து நடிப்பேன் என்றும் அவர் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.