நடராஜனுக்கு வீடியோ காலில் வாழ்த்து சொன்ன தமிழ் சினிமா தம்பதிகள்!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (16:43 IST)
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான நடராஜனுக்கு சரத்குமார் மற்றும் ராதிகா தம்பதிகள் வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டிஎன்பிஎல் கிரிக்கெட் மூலமாக தனது திறமையை நிரூபித்து ஐபிஎல்லில் இடம்பிடித்ததோடு மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணியிலும் இடம்பெற்று சாதனை படைத்தவர் நடராஜன். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின்போது தனது மனைவிக்கு குழந்தை பிறந்தபோது நாட்டிற்காக விளையாடுவதை முக்கியமாக கருதி வெற்றியை ஈட்ட உதவிய நடராஜனுக்கு மக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து இன்று தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது சம்மந்தமான புகைப்படத்தை இணையத்தில் சரத்குமார் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் இதுபோல நடராஜனிடம் வீடியோ காலில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்