பாடலின் உரிமை இருப்பவர்களிடம் அனுமதி பெற்றுதான் பயன்படுத்தினோம்- இளையராஜாவுக்கு GBU தயாரிப்பாளர் பதில்!

vinoth

புதன், 16 ஏப்ரல் 2025 (14:51 IST)
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில், இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. இந்த படம் விரைவில் 200 கோடி ரூபாய் வசூலை உலகளவில் எட்டும் என்றும் மேலும் 250 கோடி ரூபாய்க்கு மேலாக திரையரங்குகள் மூலமாக எட்டும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமானக் காரணமாக சொல்லப்படுவது, இந்த படத்தில் முக்கியமான இடங்களில் பழைய பாடல்களை ஓடவிட்டு கூஸ்பம்ப் கொடுத்தது. ஆனால் இந்த படத்தில் தன் மூன்று பாடல்களை தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும், அதற்காக நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பு நிறுவனம் “அந்த பாடல்களின் உரிமை யாரிடம் உள்ளதோ, அவர்களிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்றுதான் பாடல்களை பயன்படுத்தினோம்” என்று விளக்கம் அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்