அது காவாலா ஸ்டைல் பாட்டு இல்லை… கூலி அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

vinoth

புதன், 16 ஏப்ரல் 2025 (15:08 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகிறது.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  ஒரு பாடலுக்கு நடிகை பூஜை ஹெக்டே நடனமாடியுள்ளார். அந்த பாடல் படத்தில் முக்கியமான இடத்தில் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கூலி படத்தில் தான் நடனமாடியுள்ள பாடல் பற்றி பேசியுள்ள பூஜா ஹெக்டே “இது காவாலா போன்ற பாடல் அல்ல. இது முற்றிலும் வேறொரு vibeல் இருக்கும்” எனக் கூறியுள்ளார். கூலி படத்தில் அவர் நடனமாடியுள்ள பாடலின் போஸ் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்