பேட்ட படத்துக்குப் பின் ரஜினியோடு ஏன் படம் நடக்கவில்லை.. கார்த்திக் சுப்பராஜ் பதில்!

vinoth

புதன், 16 ஏப்ரல் 2025 (15:03 IST)
தமிழ் சினிமாவில் குறும்பட அலை வீசிய போது அதிலிருந்து வந்து வெற்றி பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் கார்த்திக் சுப்பராஜ். அவர் இயக்கிய பீட்சா, ஜிகர்தண்டா, ஆகிய படங்கள் சூப்பர்ஹிட்டாகி அவரை நம்பிக்கைக்குரிய இயக்குனராக காட்டின.

ஆனால் அதன் பின்னர் அவர் வழக்கமான கமர்சியல் பார்முலா கதைகளாக எடுக்க ஆரம்பித்தார். ரஜினிகாந்தை வைத்து ‘பேட்ட’ படத்தை இயக்கியதன் மூலம் முழுக்க முழுக்க கமர்ஷியல் பாதைக்கு சென்றார். தற்போது சூர்யாவை வைத்து ரெட்ரோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் பேட்ட படத்துக்குப் பிறகு சில முறை ரஜினியை சந்தித்து சில கதைகளை சொன்னதாகவும், ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.  மேலும் “நான் ரஜினி சாரின் தீவிர ரசிகனாக இருப்பதால் அவரை வைத்து அதிக படம் பண்ண வேண்டும் என்று பேராசை படுகிறேனோ என்று தோன்றியது. ஆனால் இப்போது அவரை சாதாரணமாக சந்தித்துப் பேசி வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்