ஜெயிலர் முதல் பாகத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்திருந்தார். அது படத்தின் பிஸ்னஸுக்குப் பெரிய அளவில் உதவியது. அதனால் இரண்டாம் பாகத்திலும் சிவராஜ் குமார் இருப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் புற்றுநோய் சிகிச்சையில் தற்போது உள்ளார். ஆனால் இரண்டாம் பாகத்தில் தானும் இருப்பதை சமீபத்தில் சிவராஜ்குமாரே உறுதி செய்துள்ளார். மேலும் தான் சம்மந்தப்பட்ட காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.