"ஜானு" படத்தில் நடிக்க மறுத்த சமந்தா... ஏன் என்ன ஆச்சு...?

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (14:19 IST)
தமிழில் விஜய் சேதுபதி , சமந்தா நடிப்பில்  வெளியான 96 படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதையடுத்து தெலுங்கில் சமந்தா ஷர்வானந்த்  நடிப்பில் 96 படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது.  சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. 
 
இருந்தாலும் த்ரிஷா நடிப்பு தான் பெஸ்ட் என தமிழ் சினிமா ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். இப்படம் வருகிற பிப்ரவரி 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சமந்தா கூறியதாவது, "முதலில் இந்த படத்தில் நடிக்க தில் ராஜு என்னிடம் கேட்டபோது நான் மறுத்துவிட்டேன். பின்னர் திரும்பவும் என்னிடம் நடிக்க கேட்டதற்கு ரொம்ப நன்றி... நாம் ஒரு நல்ல தரமான படத்தை தெலுங்கில் உருவாக்கியுள்ளோம் என தோன்றுகிறது. 
 
இப்போதைக்கு நான் இதை பற்றி அதிகம் பேசக்கூடாது படம் வெளியான பிறகு நிச்சயம் நிறைய பேசுவேன் என அவர் கூறினார்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்