அவரோட நடிக்கவே அச்சமா இருந்துச்சு... வெளிப்படையாக சொன்ன ஐஸ்வர்யா ராஜேஷ்!

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (12:26 IST)
தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகரான விஜய் தேவரகொண்டா தற்போது வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில்  ஐஸ்வர்யா ராஜேஷ்,ராஷி கண்ணா, கேத்ரீன் தெரசா, இசபெல் லெய்ட் என்று நான்கு ஹீரோயின்களும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் காதலிகளாக நடித்துள்ளனர்.  கூடவே மீண்டும் கோபக்கார இளைஞனாகவே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா தோன்றியுள்ளார் 
 
இப்படத்தில்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் தேவர்கொண்டாவின் மனைவியாக  சுவர்ணா என்ற கேரக்டரில் நடித்துள்ளார். படத்தின் அனுபவம் குறித்து அவரிடம் கேட்டபோது, "விஜய் தேவர்கொண்டா எப்போதும் போலவே இந்த படத்திலும் அற்புதமாக நடித்துள்ளார். வழக்கபோலேவே அனைவர் மனதிலும் நிச்சயம் இடம் பிடிப்பார் அதில் டவுட்டே இல்லை... ஆனால், எனக்கு தான் ஆரம்பத்தில் அவருடன் நடிக்கும்போது  அவர் மீது ஒரு சின்ன அச்சம் இருந்தது அதனால் பயந்துகொண்டே தான் நடித்தேன் என கூறினார். 
 
முழுக்க முழுக்க  ரொமான்டிக் படமாக  உருவாகியுள்ள வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்