பாகுபலிக்கு பிறகு ஹிட் கொடுக்க முடியாமல் பிரபாஸ் தவித்து வரும் நிலையில் சமீபத்தில் ரிலீஸான அவரின் ஆதிபுருஷ் திரைப்படம் மோசமான விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்தது. ஆனால் அடுத்து பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான். இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.
இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸாக உள்ள நிலையில் இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜூலை 6 ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களின் விநியோக உரிமை சுமார் 160 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொகை இதுவரை எந்தவொரு படத்துக்கும் கொடுக்கபடாத தொகை என்பது குறிப்பிடத்தக்கது.