படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்தால்தான், அடுத்தடுத்த பாகங்கள் ரிலீஸ் ஆகும் என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருந்தார். ஆனாலும் இந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்தது.
இதையடுத்து மூன்றாம் பாகம் அவதார் – நெருப்பும் சாம்பலும் இந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த படத்தின் டீசர் இம்மாதம் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25 அன்று வெளியாகும் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் திரைப்படத்துடன் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.