விஜய்யை டைரக்ட் பண்ணிட்டா நீ பெரிய ஆளா? லோகேஷ் படத்தில் நடிக்கும் எண்ணம் இல்லை - பிரபாஸ் காட்டம்!

புதன், 28 ஜூன் 2023 (17:22 IST)
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் நான்கே படங்களில் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றி பெற்று வரும் நிலையில் முன்னணி நடிகர்கள் அவர் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளனர். தனக்கென ஒரு சினிமாட்டிக் யூனிவர்ஸை கைதி மற்றும் விக்ரம் படங்களின் மூலம் உருவாக்கி உள்ளார் லோகேஷ். 
 
இப்போது அவர் விஜய்யை வைத்து இயக்கும் லியோ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் உருவாகி வருகிறது. மாஸ் ஹீரோவை வைத்து படம் இயக்குவதால் லோகேஷுக்கு இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என நிச்சயம் எதிர்பார்க்க முடிகிறது. இதனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி ஹீரோக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அதை அசட்டாக நினைத்துள்ளார் நடிகர் பிரபாஸ். 
 
விஜய்யை அடுத்து  பிரபாஸ் வைத்து லோகேஷ் அடுத்த படம் இயக்க நடிக்க போகிறார் என தகவல் வெளிவந்தது. ஆனால், இதை மறுத்துள்ள பிரபாஸ் "அவர் கூறுவதில் உண்மை இல்லை. மேலும், அவருடன் இணையும் எண்ணம் இப்போதைக்கு எனக்கு இல்லை" என தெரிவித்திருந்தார். வெளிப்படையாக இப்படி கறாராக பிரபாஸ் கூறியிருப்பது திரையுலக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்