பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆனது ஆதிபுருஷ் திரைப்படம். ஓம் ராவத் இயக்கிய இந்த படத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். வெளியானது முதல் நெகட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வட இந்தியாவிலும் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இல்லை என சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் ட்ரோல்களையும் இந்த படம் எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் அனுமன் மற்றும் சீதை ஆகியோரை சித்தரித்துள்ளதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அலகாபாத் நீதிமன்றத்தில் படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நேற்று வந்தபோது நீதிமன்றம் படக்குழுவினரைக் கண்டித்துள்ளது.
அனுமனையும் சீதையையும் சித்தரித்த விதம் வேதனையாக உள்ளது. சர்ச்சைகுரிய வசனங்கள் நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் காட்சிகளை என்ன செய்வீர்கள். பல சர்ச்சைகள் இருக்கும் நிலையில் பொறுப்பு துறப்பு வெளியிட்டு இருக்கிறோம் என படக்குழு சொல்கிறது. இது ராமாயனமே இல்லை என்று சொல்வீர்கள், அதை பார்க்கும் என்ன மூளையற்றவர்களா” எனக் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.