ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய தனுஷின் ‘இட்லி கடை’ படக்குழு.. முதல் சிங்கிள் அப்டேட்!

vinoth

செவ்வாய், 22 ஜூலை 2025 (10:12 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது.  படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றுகிறார்.

இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு மொத்தமும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

படம் அக்டோபர் 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது படத்தின் ப்ரமோஷன் பணிகளைப் படக்குழு தொடங்கியுள்ளது. அதன்படி வரும் ஜூலை 27 ஆம் தேதி படத்தின் முதல் தனிப்பாடலைப் படக்குழு வெளியிட உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்