10 நாட்களில் ஆதிபுருஷின் மொத்த வசூல் இவ்வளவுதான்… பட்ஜெட்டையே இன்னும் எடுக்காத சோகம்!

செவ்வாய், 27 ஜூன் 2023 (07:50 IST)
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆனது ஆதிபுருஷ் திரைப்படம். ஓம் ராவத் இயக்கிய இந்த படத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

வெளியானது முதல் நெகட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வட இந்தியாவிலும் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இல்லை என சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் ட்ரோல்களையும் இந்த படம் எதிர்கொண்டு வருகிறது.

இந்த படம் வெளியாகி 10 நாட்களைக் கடந்துள்ள நிலையில் தற்போது வரை 450 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே 450 கோடி ரூபாயாகும். அதனால் இன்னும் படத்தின் பட்ஜெட்டையே இந்த படம் வசூலிக்கவில்லை என்பது சோகமான செய்தியாக அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்