இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.
சமீபத்தில் அவர் நடிப்பில் பாலிவுட்டில் அனிமல், தெலுங்கில் புஷ்பா 2 ஆகிய இரண்டும் வெற்றி பெற்று அவரை உச்ச நடிகையாக்கின. தமிழில் ரெயின்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் தெலுங்கில் அடுத்து நடித்து வரும் கேர்ள் பிரண்ட் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார்.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தன்னுடைய தங்கையைப் பற்றி முதல் முறையாகப் பேசியுள்ளார். அதில் “என்னுடைய தங்கைக்கும் எனக்கும் 16 வயது வித்தியாசம். ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவளிடம் நான்தான் அவள் அக்கா என்று சொல்லாமலே வளர்த்தோம். இப்போது அவளுக்கு எது கேட்டாலும் கிடைக்கிறது. ஆனால் அப்படிக் கிடைக்கக் கூடாது என் நான் நினைக்கிறேன். ஏனென்றால் நான் அப்படிதான் வளர்ந்தேன். அதனால்தான் நான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். ஆனால் அவளுக்கு தேவைப்படும் பாதுகாப்பையையும் ஆதரவையும் கொடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.