சென்னை வந்தடைந்த தோனி…டிஷர்ட் வாசகத்தால் ரசிகர்கள் குழப்பம்!

vinoth

புதன், 26 பிப்ரவரி 2025 (17:01 IST)
கடந்த சில ஆண்டுகளாக தோனி ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான். அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. ஆனாலும் அவரை தற்போது சி எஸ் கே அணி அன்கேப்ட் ப்ளேயர் எனும் விதியின் மூலம் தக்கவைத்துள்ளது.

சர்வதேச போட்டிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விளையாடாத வீரர்களை அன்கேப்ட் பிளேயராக அறிவித்துள்ளது பிசிசிஐ. இதன்மூலம் தோனி அன்கேப்ட் பிளேயர் ஆகிறார். இதனால் அவரைக் குறைந்த தொகையான 4 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே நிர்வாகம்  தக்கவைத்தது. இதனால் வரும் சீசனில் அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று சென்னை வந்த தோனி தன்னுடைய டிஷர்ட்டில் மார்ஸ் கோட் எழுத்துகளால் ‘one last time (கடைசியாக ஒருமுறை)’ என்ற வாசகத்தைப் பொறித்திருந்தார். இதனால் அவர் இந்த ஒரு சீசனோடு ஐபிஎல் தொடரில் இருந்து விடைபெற உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்