இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டி.வி.எஸ். நிறுவனம் ஒரு திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அந்த படத்தில் டி.வி.எஸ். நிறுவனத்தின் வாரிசு ஒருவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில், டி.வி.எஸ். நிறுவனத்தின் வாரிசு ஒருவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை டி.வி.எஸ். நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்க இருப்பதாகவும், அந்த ஹீரோவுக்கு பாலா நடிப்பு பயிற்சி உள்பட சில நுட்பங்களை பயிற்சி அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகாமல், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, கதையின் தேவைக்கேற்ப பட்ஜெட் செலவழிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்களுடைய குடும்ப வாரிசு பாலாவின் இயக்கத்தில்தான் அறிமுகமாக வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் பாலாவிடம் கோரிக்கை வைக்க, பாலாவும் அந்த கோரிக்கையை ஏற்று கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, பாலாவின் படத்தில் அறிமுகமாகும் டி.வி.எஸ். நிறுவனத்தின் வாரிசு தமிழ் சினிமாவை கலக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.