கோடியில் சம்பளம் கேட்கிறாரா காயடு லோஹர்.. வதந்திகளை கிளப்பிவிடும் யூடியூபர்கள்..!

Siva

புதன், 9 ஜூலை 2025 (18:24 IST)
பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்' திரைப்படத்தின் நாயகியான காயடு லோஹர், அந்த ஒரு படத்தின் வெற்றி காரணமாக தமிழ் சினிமாவில் பல வாய்ப்புகளை பெற்று வருகிறார் என்பதை நாம் பார்த்து வருகிறோம். குறிப்பாக, எஸ்.டி.ஆர். நடிக்கும் 49வது படத்தில் அவர்தான் நாயகி என்றும், அதுமட்டுமின்றி 'இதயம் முரளி' உள்பட நான்கு படங்களில் அவர் ஒப்பந்தமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், தனக்குரிய மார்க்கெட்டை புரிந்து கொண்ட காயடு லோஹர் திடீரென சம்பளத்தை உயர்த்தி விட்டதாகவும், கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பதாகவும், இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் யூடியூபில் உள்ள ஒரு சிலர் வதந்திகளை கிளப்பி விடுகின்றனர்.
 
இது குறித்து காயடு லோஹர் தரப்பிலிருந்து விளக்கம் அளித்தபோது, தனது சம்பளம் குறித்து வெளியான தகவல் முழுக்க முழுக்க தவறானது என்றும், தான் தனக்குரிய சரியான சம்பளத்தை மட்டுமே பெற்று வருவதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
யூடியூபில் உள்ள ஒரு சிலர் பரபரப்பு ஏற்படுத்துவதற்காக முன்னணி நடிகைகள் அல்லது முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருப்பவர்கள் மீது வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியுடன் தவறான தகவல்களை பரப்பி வருவதாக ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்