நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படத்தின் பிசினஸ் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் ஆடியோ, சாட்டிலைட் உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமை விற்பனை செய்யப்பட்டு விட்ட நிலையில், அடுத்த கட்டமாக தியேட்டர்கள் உரிமை குறித்த வியாபாரம் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஒரு சில அரசியல் காரணங்களுக்காக இந்தப்படத்தின் பிசினஸ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தான் இந்த படத்தின் பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும் என கூறப்படுகிறது.