கனவுக்கன்னி ரம்பாவிற்கு மூன்றாவது குழந்தை பிறந்தது - என்ன குழந்தை தெரியுமா?

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (15:08 IST)
நடிகை ரம்பாவிற்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக  வலம்வந்தவர் நடிகை ரம்பா. ரஜினி, கமல், விஜய், அஜித் என தமிழ் திரையுலகின் டாப்  நட்சத்திரங்களுடன்  இணைந்து நடித்தவர். 90களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இவர் திகழ்ந்தார்.
 
இவர் கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரான இந்திரன் பத்மநாதனை 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, லாவன்யா மற்றும் சாஷா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
 
இந்நிலையில் ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பமாகி அவருக்கு சமீபத்தில் கோலாகலமாக வளைகாப்பு நடைபெற்றது.
 
தற்பொழுது ரம்பா ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். இதனை ரம்பா தனது டிவிட்டர் பக்கத்தில் ஆனந்தத்துடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்