பயங்கர விபத்தில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர் - பரிதாபமாய் உயிரிழந்த குழந்தை

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (14:25 IST)
கேரளாவில் பிரபல இசையமைப்பாளரான பாலா பாஸ்கர் பயங்கர விபத்தில் சிக்கியுள்ளார்.
மலையாள திரையுலகில் பிரபல இசையமைப்பாளரான பாலா பாஸ்கர் தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் திருச்சூரில் உள்ள ஒரு கோவிலுக்கு காரில் சென்றுள்ளார்.
 
கோவிலில் தரிசனம் முடிந்த பிறகு காரில் குடும்பத்தினரோடு ஊர் திரும்பிக்கொண்டிருந்தார் பாலா. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் அவரின் 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழக்க, பாலாவும் அவரது மனைவியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் கேரள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்