இந்த அளவுக்கு கவர்ச்சியில் இறங்கிட்டாரே பிரபல தமிழ் நடிகை!

ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (12:13 IST)

வேலையில்லா நடிகருக்கு ஜோடியாக நடித்த பால் நடிகை, இப்போது  கவர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார். இதுவரை கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து டூயட் பாடியவர் , கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.


நயன்தாரா திரிஷா வெற்றிகரமாக கதாநாயகி களுக்கான படங்களில் வலம் வருகிறார்கள். இதனால் இவருக்கும் அந்த ஆசை அதிகரித்துள்ளது. 

சமீபத்தில் இந்த வேலை இல்லாத நாயகி நடிக்கும் டிரஸ் சம்பந்தப்பட்ட படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது. அந்த போஸ்டரை பார்த்து பலரும் நாயகியை பாராட்டினாலும் ஒரு சிலர் கடுமையாக விமர்சிக்கவும் செய்தார்கள். 

டிரஸ் படத்தில் பால் நடிகையை ஒரு கும்பல் காட்டு பங்களா ஒன்றில் நிர்வாணமாக அடைத்து விடுகிறார்களாம். அந்த அறைக்குள் கிடைத்த பழைய துணிகளை சேகரித்து, நடிகை தனது உடலை மறைத்துக் கொள்வது போலவும் படமாக்குகிறார்களாம்.

இந்த பழைய உடையுடன் தான் நடிகை சமீபத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்தாராம். அந்த காட்டு பங்களாவில் இருந்து நடிகை எப்படி தப்புகிறார் என்பதே படத்தின் முக்கிய காட்சியாக உருவாகுகிறதாம்.  நடிகைகள் கவர்ச்சியாக நடித்து வருகிறார்கள் ஆனால் இந்த நாயகி கவர்ச்சியின் அடுத்த கட்டத்துக்கு போய் விட்டார்.

இவர் ரசிகர்களை கவரவும், படங்களை,  அதிகரிக்கவும் இந்த மாதிரியான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக கிசுகிசுக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்