லால் சலாம் படத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்க வரும் நடிகை!

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (17:07 IST)
லால் சலாம் படத்தில் நடிகர் ராஜசேகரின் மனைவி ஜீவிதா ராஜசேகர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐஸ்வர்யா இயக்கும் புதிய படமான லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிரது. இந்த படத்தில் கதாநாயகன்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் கடைசியாக குசேலன் மற்றும் ரா ஒன் ஆகிய படங்களில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் விக்ராந்தின் தாயாக நடிகர் ராஜசேகரின் மனைவியும், முன்னாள் நடிகையுமான ஜீவிதா ராஜசேகர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த ஜீவிதா இந்த படத்தின் மூலம் தன்னுடைய மறுவருகையை நிகழ்த்த உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்