வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமான விஷ்ணு விஷால் அதன் பின்னர் முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை மற்றும் ராட்சசன் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்து தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார். அவர் இப்போது ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய விவாகரத்து குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அதில் “நான் என் முதல் மனைவியை நான்காண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். எங்கள் திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அவரை என் வாழ்நாள் முழுவதும் கைவிடமாட்டேன் என்று சொல்லிதான் திருமணம் செய்துகொண்டேன். அவரை எப்போதும் விவாகரத்துக்கு செய்ய வேண்டும் என நான் நினைத்ததில்லை. விவாகரத்து அவரது முடிவுதான்” எனக் கூறியுள்ளார்.