அண்ணாத்த படத்திற்குப் பின், ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர்”படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர மேலும் சில நடிகர்களும் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் ஸ்டண்ட் மாஸ்ட்டர் சிவா கூறியதாவது: இப்படத்தில் மொத்தம் 7 சண்டைக் காட்சிகள் முடிந்துள்ளதாகவும், இவை அனைத்தும் சிறப்பாக வந்துள்ளதாகவும், ரசிகர்களுக்கு பிடித்தமானதாக ஆக்சன் காட்சிகளாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.