பொங்கல் ரிலீஸில் இருந்து ரஜினியின் லால் சலாம் விலகுகிறதா? ஏன்?

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2023 (12:37 IST)
ரஜினிகாந்த் லைகா நிறுவனத்துக்கு லால் சலாம் மற்றும் ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ என இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்து இப்போது ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு லால் சலாம் படத்தின் டீசர் வீடியோ ஒன்று வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என சொல்லப்படுகிறது. ஏனென்றால் இன்னமும் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனையாகவில்லையாம். அதனால்தான் இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது சந்தேகம் என சொல்லப்படுகிறது. இதை உறுதிப் படுத்துவது போல லைகா தயாரித்துள்ள மிஷன் 1 :அச்சம் என்பது இல்லையே படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்