தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடித்த 'குபேரா' திரைப்படம் கடந்த வெள்ளிக் கிழமை பேன் இந்தியா படமாக ரிலீஸானது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்க சுனில் நாரங் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் இருந்தும் இதை ஒரு தெலுங்கு படமாகவே ரசிகர்கள் பார்த்ததால் தமிழ் நாட்டில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படத்துக்குக் கிடைக்கவில்லை.
அதில் “இரத்தம், கத்தி, ஆக்ஷன் இருக்கும் படங்கள்தான் பெரிய வெற்றி பெறும் என்ற மாயை உள்ளது. ஆனால் மனித உணர்வுகளைப் பேசும் படங்களும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை குபேரா கொடுத்துள்ளது. தமிழிலும் இதுபோல டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெற்றி பெற்றது. வெற்றி பெறும் போது அதிகம் பேசக் கூடாது என்று என் அம்மா சொல்லியுள்ளார். நான் இனிமேல் குறைவாகதான் பேசப் போகிறேன்” எனக் கூறியுள்ளார்.