நகைச்சுவை நடிகர் போண்டாமணி மறைவு.. திரையுலகினர் இரங்கல்..!

ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (06:56 IST)
பிரபல காமெடி நடிகர் போண்டாமணி இன்று காலமானார் அவருக்கு வயது 60.

நடிகர் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் போண்டாமணி. பாக்யராஜ் இயக்கத்தில் உருவான பவுனு பவுனுதான் என்ற படத்தில் அறிமுகமான அவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் இவர் இலங்கையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் போண்டாமணியின் இரு சிறுநீரகங்களும் பழுதடைந்த காரணத்தால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திடீரென அவர் தனது வீட்டில் மயங்கி விழுந்ததாகவும் இதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் போண்டாமணியின் மறைவை அடுத்து தமிழ் திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்